• Log in
  • Register
NSW Government – Multicultural Health Communication Service
  • Publications
    • Uploading your resources
    • Health Literacy
    • COVID-19 - Coronavirus
    • Latest Publications
    • Appointment Reminder Translation Tool
    • Glossaries
    • Browse by Language
    • Browse by Topic
    • Refugee health
  • Policies & guidelines
    • MHCS Plans and Guidelines
    • NSW Health Policies and Guidelines
  • Media
    • Newsletters
    • MHCS 20th Anniversary
    • Forums
    • Media Releases
    • Media Coverage
    • Multicultural Media online
  • About Us
    • Campaigns and Projects
    • What We Do
    • MHCS Staff Profiles
    • Frequently Asked Questions
    • Testimonials
    • Copyright and disclaimer
    • Awards
    • Multicultural Health Week
  • Log in
  • Register
    Open search
      Flower

      Glossaries search

      • Home
      • Publications
      • Glossaries
      • Glossaries search
      Search
      Terminology
      Topic
      Language

      Glossary PDF download

      • COVID19 Glossary - Tamil
      • எதிர்ப்பாற்றல் தூண்டி

        ‘துணையூக்கி’ (adjuvant) என்பது சில தடுப்பூசி மருந்துகளில் பயன்படுத்தப்படும் ஒரு செய்பொருள் ஆகும். அதி-வலுவான நோயெதிர்ப்புத் திறனை நமது சரீரங்கள் உருவாக்கிக்கொள்ள இது உதவுகிறது. தடுப்பூசி மருந்திலுள்ள மற்ற கூறுகளுடன் இந்தத் துணையூக்கி இணைவாய்ச் செயலாற்றும். சில தடுப்பூசி மருந்துகளில் இவை 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

      • பாதக எதிர்விளைவு (எதிர்வினை)

        தடுப்பூசி மருந்து அல்லது மருந்து ஒன்றை எடுத்துக்கொண்ட பிறகு ஏற்படும் எதிர்பாராத அல்லது பாரதூர விளைவு. ஏற்படும் என்று எதிர்பார்க்காத ஒரு விடயம்.

      • நோயெதிர்ப்புத்திறனூட்டலின் பின் ஏற்படும் பாதகமான எதிர்விளைவு

        நோயெதிர்ப்புத்திறனூட்டலின் பின் ஏற்படும் ஒரு எதிர்பாரா விளைவு. இந்தப் பிரச்சினைக்கு தடுப்பூசி மருந்து காரணமாக இல்லாமல் இருந்திருக்கலாம்.

      • ‘தடுப்பூசி மருந்து ஆலோசனைக் குழு’ (ACV)

        மருத்துவ மற்றும் விஞ்ஞான அறிவுரைகளை வழங்கும் வல்லுநர்கள் குழு. ஆஸ்திரேலிய அரசாங்கத்தினது ‘சுகாதாரத் திணைக்கள’ அமைச்சருடனும் ‘மருத்துவ சிகிச்சைப் பொருட்கள் நிர்வாகம்’ (Therapeutic Goods Administration (TGA) எனும் அமைப்புடனும் இந்தக் குழுவினர் கலந்தாலோசிப்பர். தடுப்பூசி மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த விடயங்களைப் பற்றி இவர்கள் அறிவுரை வழங்குவர்.

      • கடும் ஒவ்வாமை (‘ஆனஃபிலாக்ஸிஸ்’)

        இது ஒரு விரைவாய் ஏற்படும் பாரதூரமானதொரு ஒவ்வாமை எதிர்வினை. உணவு அல்லது மருந்தின் காரணமாக ஏற்படும் எதிர்வினையாக இது இருக்கக்கூடும். சுவாசச் சிரமங்கள், சுயநினைவு இழப்பு, இரத்த அழுத்தக் குறைவு ஆகியன இதற்கான நோயறிகுறிகளில் உள்ளடங்கக்கூடும். பாதிக்கப்பட்ட நபருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும், சில வேளைகளில் பாதிப்பிற்குள்ளானவர் மரணம் அடையக்கூடும்.

      • காப்பு மூலம்

        பாக்டீரியாக்கள், வைரஸுகள், அல்லது பூஞ்சைகள் போன்ற, சரீரத்திற்குள் சென்றால் தொற்றையும், நோயையும் ஏற்படுத்தும் ஒரு அன்னிய (வெளிப்புற) வஸ்து. நோயெதிர்ப்பு முறைமையானது அவற்றைக் கண்டுபிடித்து அவற்றோடு போரிடுவதற்கான நோயெதிர்ப்பிகளை உற்பத்தி செய்யும்.

      • சம்பந்தத்-தொடர்பு

        ஒரு நிகழ்விற்கும், அதே நேரத்தில் இடம்பெறும் அதே போன்ற இன்னொரு நிகழ்விற்கும் இடையேயான தொடர்பு. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் இடம்பெறுகின்றன என்ற போதும் ஒரு நிகழ்வின் காரணமாகவே மற்ற நிகழ்வு ஏற்படுகிறது என்பது உறுதியாகாது.

      • நோயறிகுறியில்லா

        நோய்த்தொற்றிற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத ஒருவர்

      • குறை-வீரியத் தடுப்பூசி

        நோய் ஒன்றினைத் தோற்றுவிக்கும் கிருமியின் வலு குறைந்த (அல்லது வீரியம் குறைந்த) வடிவம் ஒன்றை உயிருள்ள தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்துகின்றன. இந்தத் தடுப்பூசி மருந்துகள் அவை தடுக்க உதவும் இயற்கையான நோய்த்தொற்றுகளைப் போன்றதாகும். வலுவான மற்றும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கக்கூடிய நோயெதிர்ப்புச் செயல்திறனை இவை உருவாக்குகின்றன.

      • ஆஸ்திரேலியத் தடுப்பூசி மருந்தளிப்புப் பதிவேடு

        அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் இடப்பட்டுள்ள அனைத்துத் தடுப்பூசி மருந்துகளைப் பற்றியுமான தகவல்களைக் கொண்டுள்ள மின்னணுப் பதிவேடு.

        1234567 Next
      back to top Back to top

      Follow us

      • Facebook
      • YouTube
      • Mail
      • Twitter
      • WeChat
      • LinkedIn
      • Instagram
        • Service NSW
        • NSW Health
        • Careers in NSW Health
        • Subscribe
      • Site information
        • Site Map
        • Accessibility
        • Contact
        • Privacy
        • Copyright and Disclaimer

      © Copyright NSW Govemment