சோதனை-நிலைத் தடுப்பு மருந்து
இன்னும் சோதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும், மற்றும் அனுமதி வழங்கப்படாமலிருக்கும் ஒரு புதிய தடுப்பூசி மருந்து.
அறிமுக விநியோகம்
புதிய மருந்து அல்லது தடுப்பூசி மருந்து ஒன்றின் அறிமுகம். ‘கோவிட்-19’ தடுப்பூசி மருந்தளிப்புத் திட்டத்தில் இது 1a, 1b, 2a, 2b, 3 என்ற பன்முகங்களைக் கொண்டதாக இருக்கும். ‘கோவிட்-19’ நோய்த்தொற்று ஏற்பட்டால் யாரெல்லாம் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதைப் பற்றிய தற்போதைய சுகாதார மற்றும் மருத்துவ ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு தடுப்பூசி மருந்தினைப் பெறுவதற்கான முன்னுரிமைக் குழுக்கள் தீர்மானிக்கப்படும்.
‘ஸார்ஸ்-கோவ்-2’
‘கோவிட்-19’ எனப்படும் நோயைத் தோற்றுவிக்கும் ‘வைரஸ்’-இன் அதிகாரப் பூர்வப் பெயர். இது ‘கொரோனாவைரஸுகள்’ எனப்படும் ஒரு ‘வைரஸ்’ குடும்பத்தைச் சேர்ந்தது.
ஊநீரியல் (செரோலஜி)
இரத்தத்தில் உள்ள நோயெதிர்ப்பிகள் (நோயெதிர்ப்புப் புரதம்)-இன் மட்டத்தினை அளவிடுதல்.
பரவல்
ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்குப் பரவ வைரஸ் ஒன்றிற்கு உள்ள திறன்.
தடுப்பூசி மருந்து
குறிப்பிட்ட கிருமிகளுக்கு எதிராகப் போரிட்டு நோயைத் தடுக்க நமது நோயெதிர்ப்பு முறைமைக்கு உதவும் ஒரு வகை மருந்து. பொதுவாக ஒருவர் கிருமியை எதிர்கொள்வதற்கு முன்பாக அவருக்குத் தடுப்பூசி மருந்துகள் கொடுக்கஇடப்படும். நோய்க் கிருமிகளுக்கு எதிரான நோயெதிர்ப்பிகளை உருவாக்க நோயெதிர்ப்பு முறைமைக்கு ஒவ்வொரு தடுப்பூசி மருந்தும் ஊக்கமளிக்கும்.
தடுப்பூசித் தயக்கம்
தடுப்பூசி மருந்தினைப் பற்றி ஒருவர் உறுதியில்லாமல் நிலையில் இருக்கும் நிலைமை அல்லது கிடைக்கக்கூடியதாக இருக்கும் தடுப்பூசி மருந்தினப் பெற்றுக்கொள்ள அவர் தாமதித்தல் அல்லது மறுத்தல்.
குப்பி
மருந்தை அடைப்பதற்கான சிறு கலன்
‘கோவிட்-19’ நோயைத் தோற்றுவிக்கும் ‘வைரஸ்’
இலிருந்து வேறுபட்ட ஒரு ‘வைரஸ்’-இன் மாற்றியமைக்கப்பட்ட உருவை இது கொண்டிருக்கும். ‘கோவிட்-19’ நோயை உண்டாக்கும் ‘வைரஸ்’-இல் இருக்கும் வஸ்து இந்த மாற்றியமைக்கப்பட்ட வைரஸ்-இற்குள்ளாக இருக்கும். இது “வைரல்-வெக்டர்” என்று சொல்லப்படுகிறது. நமது உயிரணுக் கலன்களுக்குள்ளாக இந்த வைரல்-வெக்டர் ஒரு முறை சென்றதும், ‘கோவிட்-19’ நோயை உண்டாக்கும் ‘வைரஸ்’-இன் தனித்துவத்தைக் கொண்ட புரதம் ஒன்றை உருவாக்குவதற்கான உத்தரவுகளை இந்த மரபியல் வஸ்து உயிரணுக் கலன்களுக்குக் கொடுக்கும். இந்த உத்தரவுகளைப் பயன்படுத்தி, நமது உயிரணுக் கலன்கள் இந்தப் புரதத்தின் பிரதிகளை உருவாக்கும். எதிர்காலத்தில் நமக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், அந்த ‘வைர’ஸுடன் எப்படிப் போரிடுவது என்பதை நினைவுகூரும் ‘T- லிம்ஃபோசைட்டுகள்’ மற்றும் ‘B- லிம்ஃபோசைட்டுக’ளை உருவாக்க நமது சரீரத்தினை இது தூண்டும்.
குறைவுறும் நோயெதிர்ப்புத் திறன்
காலப் போக்கில் உங்களுடைய நோயெதிர்ப்புத் திறன் படிப்படியாகக் குறைந்து வரும் நிலை.