கட்டுப்பாட்டுக் குழு
எந்தத் தடுப்பு மருந்துகள் ஒரு நாட்டில் பதிவுசெய்யப்படலாம் மற்றும் சட்டப்படி அந்த நாட்டில் பயன்படுத்தப்படலாம் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு அரசாங்க அமைப்பு
அறிமுக விநியோகம்
புதிய மருந்து அல்லது தடுப்பூசி மருந்து ஒன்றின் அறிமுகம். ‘கோவிட்-19’ தடுப்பூசி மருந்தளிப்புத் திட்டத்தில் இது 1a, 1b, 2a, 2b, 3 என்ற பன்முகங்களைக் கொண்டதாக இருக்கும். ‘கோவிட்-19’ நோய்த்தொற்று ஏற்பட்டால் யாரெல்லாம் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதைப் பற்றிய தற்போதைய சுகாதார மற்றும் மருத்துவ ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு தடுப்பூசி மருந்தினைப் பெறுவதற்கான முன்னுரிமைக் குழுக்கள் தீர்மானிக்கப்படும்.
‘ஸார்ஸ்-கோவ்-2’
‘கோவிட்-19’ எனப்படும் நோயைத் தோற்றுவிக்கும் ‘வைரஸ்’-இன் அதிகாரப் பூர்வப் பெயர். இது ‘கொரோனாவைரஸுகள்’ எனப்படும் ஒரு ‘வைரஸ்’ குடும்பத்தைச் சேர்ந்தது.
ஊநீரியல் (செரோலஜி)
இரத்தத்தில் உள்ள நோயெதிர்ப்பிகள் (நோயெதிர்ப்புப் புரதம்)-இன் மட்டத்தினை அளவிடுதல்.
பக்க விளைவு
தடுப்பூசி மருந்து ஒன்றின் வேண்டாத அல்லது எதிர்பாராத விளைவுகள் எதுவும்.
முள் புரதம்
கொரோனாவைரஸுகள் அவற்றின் மேற்பரப்பில் கூர்மையான முட்டுகளைக் கொண்டிருக்கும். அந்த முட்டுகள் ‘முள் புரதம்’ என்று சொல்லப்படுகின்றன. ஒருவருடைய உயிரணுக்குள் நுழைய இவை இந்த வைரஸ்-இற்கு உதவுகின்றன.
‘மருத்துவ சிகிச்சைப் பொருட்கள் நிர்வாகம்’ (TGA)
மருத்துவ சிகிச்சைப் பொருட்கள் நிர்வாகம்’ (Therapeutic Goods Administration (TGA)) என்பது, தடுப்பு மருந்துகளும் மற்ற மருந்துகளும் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்பட இயல்வதற்கு முன்பாக அவற்றைச் சோதிப்பதற்கான பொறுப்பைக் கொண்டுள்ள ஒரு அமைப்பாகும்.
‘குறைந்த இரத்த வட்டுக(பிளேட்லெட்டுகள்) ளால் ஏற்படும் குருதியுறைவு’
புதிதாய் விளக்கம் சொல்லப்பட்டுள்ள ஒரு பாரதூரமான நோய்-நிலை. மூளை அல்லது சரீரத்தின் மற்ற பகுதிகளில் வழமைக்கு மாறான இரத்த உறைவுகள் ஒருவருக்கு ஏற்படும். இரத்த வட்டுக(பிளேட்லெட்டுகள்) ளின் அளவு குறைவடையும் நிலையோடும் இது சம்மந்தப்பட்டிருக்கும்.
பரவல்
ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்குப் பரவ வைரஸ் ஒன்றிற்கு உள்ள திறன்.
தடுப்பூசி மருந்து வழங்கல்
குறிப்பிட்ட ஒரு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுவதற்கானள உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு க்கு உதவுவதற்காக தடுப்பூசி ஏற்றப்படுகிறதுமருந்து ஒன்றை இடல். ‘ஏற்றல்’, ‘குத்துதல்’, ‘ஊசி’ , மற்றும் ‘தடுப்பூசி’ ஆகியன பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதங்களுக்குள் அடங்கும்.ளில் உள்ளடங்கும்.